பிரதேசசபை தவிசாளருக்கு தர்ம அடி!


மக்களால் தெரிவுசெய்யப்பட்டு யாழ்.மாநகரசபைக்கு சென்றவர்களது மூன்றாம் தர அரசியலால் யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வு குழப்பங்களிற்குள்ளானது.

தன்னை இராவண தோற்றமுடையவன்.கூட்டமைப்பு சார்பு உறுப்பினரான தர்சானந்திடம்  திராவிட தோற்றமுண்டா ? இலங்கை வந்து திரும்பிய இந்திய படையின் கூர்க்;காஸ் தோற்றமுடையவர் என  ஈபிடிபி சார்பு உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வில் கூட்டமைப்பு சார்பு உறுப்பினரான தர்சானந்த் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்த கருத்தே சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இதனையடுத்து 1987ம் ஆண்டில் இந்திய கூர்க்கா படையினர் நிலை கொண்டிருந்தனர்.அப்போது பிறந்தவரென தர்சானந்தினை ரெமீடியஸ் விமர்சிக்க சர்ச்சை மூண்டிருந்தது.
பதிலுக்கு ரெமீடியஸை ஒரு முட்டாள். இதுதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல் என திட்டித்தீர்த்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு கௌரவ உறுப்பினர்கள் கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அமர்விலிருந்து வெளியேறினர்.

இதனிடையே மட்டக்களப்பு- மண்முனை பிரதேச சபையின் தவிசாளர் மீது சபைக்குள் வைத்து மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் 22ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. இதன்போது, சபையின் உறுப்பினர்கள் சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டதால் சபையினை ஒத்திவைத்து வெளியேற முற்பட்டபோது தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மண்முனைப்பற்று தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

தான் அங்கிருந்து வெளியேறியபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர் தன்னை வெளியேறவிடாமல் தடுத்து தாக்கியதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.


No comments