வல்வெட்டித்துறையிலும் சண்டை?


வல்வெட்டித்துறை நகரசபையில் கூட்டமைப்பிடையேயான குடுமிப்பிடி சூடுபிடித்துள்ளது.இன்று நடைபெற்ற சபைக் கூட்டம் நகர சபையின் தலைவர் கோ.கருனந்தராசா தலைமையில் நடைபெற்றது.  9.30 மணிக்கு ஆரம்பமான கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த  உப தவிசாளர் ஆறுமுகம் ஞானேந்திரன் என்பவருக்கும் புதிதாக உருவாகியுள்ள சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த  தவிசாளர் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

தவிசாளர் உடனடியாக உப தவிசாளர் சபையிலிருந்து நிறுத்துவேன் என கூறி கூட்டத்தை ஒத்திவைத்தார். சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமான போது தவிசாளர் உப தவிசாளரை  வருகின்ற மாதம் 28ம் தேதி வரை கூட்டத்துக்கு சமூகமளிக்க வரவேண்டாம் என மீண்டும் வெளியேற்றினார். உபதவிசாளர் சபையை விட்டு உடனடியாக வெளியேறினார். 

No comments