கூட்டமைப்பு பிரதேசசபைக்கெதிராக கடையடைப்பு?


தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் இலங்கையில் எந்த உள்ளுராட்சி சபையாலும் அறவிடப்படாத அளவுக்கு அதிகரித்த ஆதனவரி அறவிடப்படுவதற்கு எதிராக வர்த்தகர் ஒருவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

அவரால் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கடை அடையடைப்பு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் வசமுள்ள கரைச்சி பிரதேசசபை தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுவருகின்ற நிலையில் மறுபுறம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தரப்பு குடைச்சல் கெர்டுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments