சுமந்திரனிற்கு பணமுமில்லை:ஜதேகவிலேயே போட்டி:விஜயகலா?

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு 15 கோடி லஞ்சம் கொடுக்கவில்லையென விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் கீழ் யாழ். தேர்தல் தொகுதியில்தான் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டார் எனவும்; செய்திகள் வெளிவந்தன.

இது தொடர்பில் விஜயகலா மகேஸ்வன் கருத்து தெரிவிக்கையில் எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும். எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லைஇ அதற்கான பேச்சுகளும் இடம்பெறவில்லை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன்.” என்றார்.முன்னதாக அவரது கணவரான மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததும் கூட்டமைப்பு கொழும்பில் தனித்து போட்டியிட சிந்தித்துவரும் தெரிந்ததே.இந்நிலையிலேயே சுமந்திரன் பணம் கேட்டவிவகாரம் விஜயகலாவின் ஆதவாளர்கள் மூலம் கசிந்திருந்தது.

No comments