புலிக்கு இப்பொழுதும் பயப்படும் இலங்கை?

யாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினரும்  சிங்கள பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அவர்கள் வரைந்த புலியின் படத்தை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் வரைந்து வருகின்றனர். அதற்குப் பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலியொன்றின் படத்தினை சுவரோவியமாக வரைந்தனர்.
இந்த நேரத்தில் அவ்விடத்திற்கு சிங்கள பொலிஸாருடன் சென்ற புலனாய்வுப் பிரிவினர், புலியின் உருவம் வரைய முடியாது எனவும் இதனை யாரின் அறிவுறுத்தலின் கீழ் வரைகிறீர்கள் எனவும் அச்சுறுத்தும் தொனியில் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வரைந்த படத்தை உடனடியான அழிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் ஓவியத்தை அழிக்கும்வரை அவ்விடத்தில் புலனாய்வாளர்கள் நின்றதாகவும் இளைஞர்கள் மற்றும் ஓவியம் வரைந்தவர்களின் பெயர், விபரங்கள், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

No comments