சிறுபான்மையின மக்களிற்கு ஆப்பு: வருகின்றது கோததாவின் யாப்பு!


கோத்தாபாய மீண்டும் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி கதிரையினை கனவில் வைத்து காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.இன்னொருபுறம் சிறுபான்மை கட்சிகளின் வாக்கில் தங்கியிருக்கின்ற அரசு எனும் நெருக்கடியை தவிர்க்ககூடியதான அரசியலமைப்பு பற்றி பேசப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நாட்டில் வளர்ச்சிக்காக புதிய அரசமைப்பு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். 
அரசமைப்பு திருத்த பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தெளிவுபடுத்தபட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மேற்படி அரசமைப்பு திருத்த பணிகளுக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு மிக அவசிய​மானதெனவும் தெரிவித்தார்.

No comments