சத்தமின்றி கொல்லும் கோத்தா:70 பேர் அச்சுறுத்தலில்!


சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் - இலங்கை (ஐ.டி.ஜே.பி) மற்றும் ஜே.டி.எஸ் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட நம்பகமான தகவல்கள் பிரகாரம் பிரகாரம் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள்,  கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி நபர்களை குறிவைத்து தேர்தலுக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட 70 மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் நிகழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.அதிலும் குறிப்பாக சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக இருந்தன, தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

புதிய ஜனாதிபதியின் மூலோபாயமாக இலங்கை இராணுவத்திலுள்ள தனது முன்னாள் போர்க்கால கூட்டாளிகளில் பலரை அரசு நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கு நியமிப்பதன் மூலமும், இராணுவத்தால் அரசை இராணுவமயமாக்குவது தொடர்கின்றது.

மனித உரிமை ஆர்வலர்களையும் ஊடகங்களையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆவணங்களை அறிக்கையிடுவதிலிருந்தும் அச்சுறுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் இலங்கையில் உள்ள காவல்துறை, இராணுவம் மற்றும் உளவுத்துறையினரின் முறையான தடையை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த ஒடுக்குமுறை சிங்கள ஊடகவியலாளர்களை தேர்தலுக்கு முந்தைய காலப்பகுதியில் எதிர்க்கட்சியை ஆதரித்ததாக நம்பப்படுபவர்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments