ஹிருணிக்கா பிரேமசந்திர கண்ணீருடன்?முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பொது மேடையில் கண்ணீருடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமை குறித்து மிகவும் வருத்தமடைந்ததாக ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோல்வியடைய செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியிலேயே பலர் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் இன்னமும் ராஜபக்ஷர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சஜித் தோல்வியடைந்ததனை நினைத்து ஹிருணிக்கா கண்ணீர் விட்டு அழுதவாறு கருத்து வெளியிட்டுள்ளார்

No comments