வைத்தியர் ராஜிதவிற்கு பொய் வருத்தமாம்?


ராஜித பொய்க்குற்றச்சாட்டுக்களை வைத்து வைத்திய சிகிச்சை பெறுவதாக சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

முபாரக் எனும் வைத்தியரினால் பொய்யான அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கே வைத்தியர் முபாரக் முயற்சிப்பதாகவும் நவ சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின உடல் நலம் குறித்து அரச வைத்திய அதிகாரி ஒருவரின் ஊடாக பரிசோதனை நடாத்தப்பட வேண்டும் எனவும் டான் பிரியசாத் குற்றத்தடுப்புத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை வைத்துக் கொண்டு சிகிச்சை அளிப்பது தொடர்பில் வைத்தியர் முபாரக் தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை நடாத்த வேண்டும் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினம் முதல் தற்பொழுது வரையுள்ள நாட்களில் அவருக்கு என்னவகையான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகளினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் டான் பிரியசாத் தனது முறைப்பாட்டில் குற்றத்தடுப்புப் பிரிவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.    


No comments