இனி தமிழீழ தேசிய கீதமே:ஈ.சரணபவன் சபதம்?


தமிழர்கள், தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ள கருத்து தென்னிலங்கையில் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

தேசிய கீதத்தை நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லியதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம்.  வியாக்கியானமும் தேவையில்லை.

ஒருவேளை அவர்கள்,  சிறுபான்மையினத்தினர் தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி  இசைக்கட்டுமென எதிர்பார்க்கிறார்களோ  என்று தெரியவில்லை. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வடக்கு கிழக்கில் சிங்களத்தில் தான் படிக்க வேண்டும் என்றால் அதனை அதிபர்கள் ஊக்குவிக்கக் கூடாது. வடக்கு கிழக்கிக் அத்தனை அதிபர்களும் அரச திணைக்களங்களும் அடிமைகள் ஆகக் கூடாது. எங்களுடைய முழு உரிமையைப் பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சினையாகும்.

ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள். இதனூடாக  நாங்கள்  அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். எனவே இவ்விடயத்தில் நாங்கள் இசைந்து போகக் கூடாது. முன்னர் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மீண்டும் தொடங்கி வைக்கின்றது” என சரவணபவன் தெரிவித்திருந்தார்.

இத்தகைய கருத்தே வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது.

No comments