கோத்தா ஓடவும் முடியாது ஔியவும் முடியாது

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி கோத்தாபய ராஜபக்ச தப்பிக்க முடியாது. அதற்கு தாங்கள் அனுமதிக்கபோவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

இந்த விடயத்திற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும். தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாராக இருந்த போது, யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும்.

யுத்த காலத்தில் பலர் காணாமால் ஆக்கப்பட்டவர்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டமையை நம்பி தமது உறவுகளை அரசாங்க படைகளிடம் ஒருதரப்பினர் பாரம் கொடுத்தவர்கள்.

அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல, படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

அந்த கேள்வியினை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் மழுப்பினார். எதிர்காலத்தை பார்ப்போம் என்றார். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் அரசியல் மயப்படுத்துவது என்பது வேறு விடயம்.

நாங்கள் கேட்கும் கேள்வி உங்களிடம் சரணடைந்தவர்கள் எங்கே? கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? என்பதே இதற்கு பதில் அளிக்காமல், அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் - என்றார்.

No comments