ஏவுகணை தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!

வடகொரிய நாட்டில் மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலை ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று வடகொரியாவின் எதிர் தரப்பு நாடுகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் கூட்டணியை சமாளிக்கும் வகையில், சீனாவின் ‘பஃபர் ஸ்டேட்’ என்ற அந்தஸ்தில் இருந்துவரும் வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இதில் அணுஆயுத சோதனையும் அடக்கம்.
இதனால், அந்நாட்டின் மீது தொடர்ச்சியான பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோரிடைய நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக வடகொரியாவின் ஏவுகணை தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டது.
ஆனால், தற்போது அந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கிவருவதாய் அமெரிக்க கூட்டணி நாடுகள் கண்டறிந்துள்ளன. இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு எதிர்க்கூட்டணி நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

No comments