கைதானார் ராஜித

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) சற்றுமுன் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட அவரிடம் இரவு சிஐடியினர் விசாரணை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் வைத்தியசாலையில் ராஜித தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி அவரை இப்போது கைது செய்துள்ளனர்.

பின்னணி,

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற வெள்ளை வான் ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்த பொய்களையே தாம் வெளியிட்டதாக வெள்ளை வான் சாரதிகள் என்று அறியப்படும் இருவரும் (விளக்கமறியலில் உள்ளனர்) சிஐடியில் வாக்குமூலம் அளித்திருந்திருந்தனர்.

இதன்படி ராஜித சேனாரத்னவை பிடியானை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் சிஐடி பணிப்பாளருக்கு கடந்த (24) மாலை உத்தரவிடப்பட்டது. இதன்படி நீதிமன்றம் சென்ற சிஐடியினர் பிடியாணையை பெற்றுக் கொண்டிருந்தனர்.

ராஜித சேனாரத்ன தன்னை கைது செய்வதை தடை செய்யக் கோரி முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதுகுறித்த விசாரணை 30ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அவருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments