முல்லையில் 1008 வது நாள்?



சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் எதிர்வரும் 10.12.2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை10 மணிக்கு முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கபட இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் ஈஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டும் இறுதி யுத்த காலப்பகுதியில் நேரில் கையளித்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதே அரசு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் இச் சூழ்நிலையில் இவ் அரசிடம் எமது உறவுகளுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்குமாறுசர்வதேச சமூகத்தை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


அத்துடன் மத குருமார்கள், மாணவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அனைத்துக் கட்சிகள் என அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு முழு ஆதரவினையும் வழங்குமாறு அன்புரிமையுடன் போராட்டக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

No comments