கிளாலியில் வெடிப்பு:இளைஞனை காணோம்!


போர் முன்னரங்க பகுதியாக இருந்த கிளாலியில் கண்ணிவெடி வெடித்ததில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று  சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கிளாலிப் பகுதிக்குள் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த விஜயகுமார் நிருசன்  (வயது 17) என்பவரே வலது காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்ட கிளாலி காட்டுப் பகுதிக்குள் மாடுகளை  மேய்ச்சலுக்கு கொண்டு  சென்ற வேளையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அச்செழு  பகுதியை சேர்ந்த அற்புதராஜா ராகுலன் (வயது 23) என்பவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 18ம் திகதி புதன்கிழமை வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்றவர் இதுவரை வீடு வந்து சேரவில்லை என்று  தகப்பனார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

No comments