பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (09) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

No comments