கடத்தல்; தூதரக ஊழியரிடம் பல மணி நேர விசாரணை

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் நேற்று (08) மாலை தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை இன்று (09) நீதிமன்றம் 12ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

நேற்று (08) சிஐடியில் ஆஜராகிய குறித்த பெண் ஊழியரிடம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மற்றும் இன்று காலை வரையில் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என்று சிஐடியினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று மாலையும் அவரிடம் வாக்குமூலம் பெற்று, அவரது கோரிக்கையின் பேரில் பெண் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் பெறப்படவுள்ளது என்று சிஐடி தெரிவித்துள்ளது.

பின்னணி,

குறித்த ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியரின் நடத்தைக்கும் தூதரக தகவல்களுக்கும் தொடர்பில்லை என்று அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவரை சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அந்த கோரிக்கையை சுவிஸ் தூதரகம் மறுத்த வந்திருந்தது.

இதனடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த ஊழியரை நட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து சிஐடியில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையிலேயே அவர் சிஐடியில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

No comments