மருத்துவ பரிசோதனைக்காக சட்டமருத்துவ அதிகாரி முன்?


அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று மீண்டும் சிஐடியில் ஆஜராகிய நிலையில் சற்றுமுன்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சுவிஸ் தூதரக ஊழியர் நேற்று (08) மாலை தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் ஊழியரிடம் அவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று மற்றும் இன்று காலை வரையில் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என்று சிஐடியினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் மீளவும் சிஐடியில் ஆஜரான அவர் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுள்ளார்.

No comments