புலிகள் தோற்டிகப்பட்டமை நல்லதே:சம்பந்தன்!


புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து இரா.சம்பந்தன் மீண்டும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதே. அதற்கு சர்வதேசமும் இந்தியாவும் உதவியன ” என தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது கொள்கை – இலக்கை அடைய எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை அறிய நீங்கள் காத்திருக்கிறீர்கள். அது தெரிந்தால்தான் நீங்களும் உங்கள் கருத்துகளை எமக்குச் சொல்லி, எம்முடன் இணைந்து செயற்பட முடியும்.
எமது இலக்கு, தமிழர் பகுதிக்கு அதிஉச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும். அதைப்பெற்று எமது மக்கள் கௌரவமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும் என்பதே.

1988ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 13ஆவது அரசியல் சாசன திருத்தம், இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு அரசாங்கங்களாலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அவற்றில் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. அதற்கான பதிவுகளும் உள்ளன.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியாகவும், இந்தியப் பிரமருக்கும் வாக்குறுதியளித்துள்ளது. பாரதப் பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தெளிவான கருத்தைக் கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதோர் விடயமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகிறார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்குச் சமத்துவமான அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டும்.

ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தாம் 13ஆவது அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என இந்தியாவுக்கு வாக்குறுதியளித்துள்ளார். ஆனால், நடைபெறவில்லை. அது நடைபெறவேண்டும்.

யுத்தம் முடிந்த பின்னர் நியமனமான முக்கிய குழு, கற்ற பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும். இது மகிந்தவால் நியமிக்கப்பட்டது. அதியுச்ச அதிகாரம் பகிர வேண்டும் என்பதை அந்தக் குழு சிபாரிசு செய்தது.

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம், குறிப்பாக இந்தியா உதவியது. புலிகளை அழித்த பின் தாம் நிரந்தர தீர்வு வழங்குவோம் என இலங்கை உறுதியளித்தது. ஆனால், தற்போது அரசு அதிலிருந்து நழுவ முயல்கிறது. அதற்கு சர்வதேசம் இடமளிக்கக்கூடாது. ” என்றார்.

No comments