ஹெரோயினுடன் இருவர் அதிரடி கைது

கப் ரக வாகனத்தில் பயணித்த இருவர் ஹெரோயினுடன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (16) மாலை 6 மணியளவில் ஹொரவப்பொத்தனை வீதி, இலுப்பையடிப் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிசார் தாண்டிக்குளம் பகுதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக வந்த மகேந்திரா கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவரது உடமையில் இருந்து 560 மில்லி கிராம் மற்றும் 160 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஹெ ரோயின் பொதிகள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், மகேந்திரா கப் ரக வாகனத்துடன் குறித்த இருவரையும் கைது செய்தனர்.

No comments