சூடான் வாயு கொள்கலன் வெடிவிபத்தில் தமிழர்களும் பலி;


சூடான் தலைநகர் கார்டோம் என்ற நகரத்தில் உள்ளது பாஹ்ரி என்ற பகுதி. இங்கு சலூமி என்ற செராமிக் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருந்த வாயு கொள்கலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக ஆலை முழுவதும் தீ பரவியது. ரசாயனமும் இருக்கும் இடம் என்பதால் தொழிலாளர்களால் தப்பிக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தீவிபத்து குறித்து சூடான் அரசு, இந்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார. மேலும் தீ விபத்து குறித்த தகவல்களை சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
00249 921917471 என்ற எண்ணில் சூடான் தீ விபத்து குறித்து தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments