மயிரிழையில் உயிர் தப்பிய 54பேர்?


பொலன்னறுவையில் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்ட பஸ் ஒன்று பாதுகாப்புப் படையினர் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களால் மீட்கப்பட்டுள்ளது
மாதுரு ஓயாவிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று (21) அதிகாலை பொலன்னறுவையின் கல்லெல்ல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
போலீஸ் , ராணுவம், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து பஸ்ஸை மீட்டேடுத்தனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பெண்கள் உட்பட 54 பயணிகள் பஸ்ஸுக்குள் இருந்ததாக தெரியவருகிறது .
இருப்பினும், இந்த சம்பவத்தில் பஸ்ஸுக்குள் இருந்த எவரும் காயமடையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments