சம்பிகவின் சாரதியின் மனைவியை கடத்திய சிஐடி? மறுப்பு!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று (16) நீதிமன்றில் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவின் சாரதி ஏற்படுத்திய விபத்தில் சந்தீப் சம்பத் என்ற இளைஞன் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இதனைத் தெரிவித்தார்.

எனினும் அதனை மறுத்த சிஐடியினர் அவர்களின் அனுமதியுடன் காலியில் இருந்து இடம் ஒன்றை அடையாளம் காண கொழும்புக்கு - பத்தரமுல்லைக்கு அழைத்து சென்றதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த சிஐடி தலைமை அதிகாரி நெவில் டி சில்வா, குறித்த சாரதியான துஷித குமார வீட்டுக்கு தமது அதிகாரிகள் சென்றதாகவும், குமாரவுக்கு மனைவி அவருக்கு அழைப்பெடுத்த போது அவர் பத்தரமுல்லையில் இருப்பதாக தெரிவித்ததால் அவரது மனைவியும் குழந்தையும் தாமாக முன்வந்து தமது அதிகாரிகளுக்கு இடத்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

No comments