கடத்தப்பட்ட ஊழியர் மீண்டும் சிஐடியில்

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று (13) நான்காவது நாளாக சிஐடி விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

குறித்த ஊழியரிடம் வாக்குமூலம் பதிவு செய்வது முடிவடையவில்லை என்று சிஐடியினர் நேற்று (12) கோட்டை நீதிமன்றுக்கு அறிவித்த நிலையிலேயே இன்று மீளவும் ஆஜராகியுள்ளார்.

சிஐடி விசாரணை,

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் ஊழியர் கடந்த 8ம் திகதி முதல்முறையாக தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த ஊழியரிடம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அன்று (08) மறுநாள் (09) காலை வரை 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அத்துடன் (09) அன்று மாலை முதல் இரவு வரை விசாரணை செய்த சிஐடியினர் 6 மணி நேரம் வாக்குமூம் பெற்றனர்.

மேலும் மறுநாள் (10) மூன்றாவது நாளாக சிஐடியில் ஆஜரான அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டது.

அத்துடன் குறித்த ஊழியர் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் (09), (10) இரு நாட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மூன்று தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments