ஒரு பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

கண்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
பேராதெனிய போதனா வைத்தியசாலையிலேயே குறித்த நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
அலவதுகொட பகுதியைச் சேர்ந்த திருமதி உதயங்கனி ஜெயசூர்யா என்ற பெண்ணே இந்த நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பேராதெனிய போதனா வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர் கபில குணவர்தன தொடர்ந்தும் சிகிச்சை அளித்து வருகிறார்.
குறித்த நான்கு குழந்தைகளும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments