உரிமையாளர் மகனால் தாக்கப்பட்ட பெண் ஊழியர்

வவுனியா – பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்லாமிய வர்த்தக நிலையத்தில் பணி புரியும் தமிழ் பெண்ணை குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தாக்கியதால் குறித்த பகுதியில் இன்று (21) குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் குறித்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பொது மக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் நபரையும், குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலமை சீராகியுள்ளது.

No comments