டெங்கு குறைகிறது:யாழ்.மாநகரசபை கல்வி நிலையங்கள் மூடல்!


கடந்த மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட போதும் தற்போது டெங்கின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிட இருவரை தவிர மேற்பட்டோர் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைரஸ் மற்றும் டெங்கு நோய் தாக்கம் உள்ள நிலையில் நோய்த்தொற்று ஏற்பட கூடிய சூழ்நிலை காணப்படுவதனால் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட அதிகமானவர்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துக் காணப்படும் அதேநேரம் தனியார் கல்விக்கூடங்களை யாழ்.மாநகர எல்லைக்குள் இரு வாரங்களிற்கு இயங்காது மூடுமாறு சுகாதாரத் திணைக்களம் கோரியுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் தொற்றிற்கு இந்த ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 349 பேர் இனம் காணப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள இடத்துல் இருந்து பிற இடத்துற்கு பரவுவதனை தடுக்கவும் நோய் தாக்கம் உள்ள பிரதேசத்தை நடவடிக்கைக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதன்போது நகரின் மத்தியில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் அதிகமானவை போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் டெங்கு நோய் அதிகரித்துள்ள நிலைமையில் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் இரு வாரங்களிற்கு மூடுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments