மக்கள் பிரச்சினையினை ஆராய கூடிய கூட்டமைப்பு?


தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கான ஆசன பங்கீட்டு விசேட கூட்டம் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள  இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 17ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளுக்கான ஆசன பங்கீடுகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக குறித்து கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.


கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,இ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments