தர்மம் வெல்லுமாம்?


ஈபிடிபியின் துருப்பு சீட்டாக விரட்டியடிக்கப்பட்ட யாழ்.மேலதிக அரச அதிபராக வெறும் 99 நாட்களுடன் விரட்டப்பட்ட  கனகேஸ்வரன் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் எனினும் தர்மம் மறுபடியும் வெல்லும் என தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனிடையே யாழ்.மாவட்ட மேலதிக செயலாளரை இடமாற்றம் செய்த தரப்பு மாவட்டச் செயலாளரையும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி தவிர்ந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மே மாதம் 23ம் திகதியுடன் ஒய்வு பெற்றுச் செல்லும் நிலையில் முல்லைத்தீவிற்கு இடமாற்றம் செய்ய முயற்சிக்கப்படுவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யாழ்.மாவட்ட செயலர் சுமந்திரன் ஆதரவினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments