ஆளுநர் போட்டியில் குகவரதனும்!


ஆளாளுக்கு வடக்கு ஆளுநர் பதவியை பெறுவதற்கு குத்தி முறிந்துவருகின்ற நிலையில் புதிதாக முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான சண். குகவரதன் தீவிர முயற்சியில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் அமைச்சர் தொண்டாவுடனும் அவசர சந்திப்பு ஒன்றை அவர் நடத்தியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும், 'தமிழ் மக்கள் இணையம்' அமைப்பின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சண். குகவரதனுக்குமிடையில் இன்று (5) சந்திப்பு நடைபெற்றது.

இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள ஆறுமுகன் தொண்டமானுக்கு பொன்னாடைபோற்றி வாழ்த்துகளை தெரிவித்த சண். குகவரதன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ள சண். குகவரதன் இதன் ஓர் அங்கமாகவே தொண்டமானை சந்தித்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டனர்.

முன்னாள் அமைச்சரான மனோகணேசனின் பங்;காளியான குகவரதன் அண்மையில் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஊடகவியலாளர் ந.வித்தியாதரனது பெயரும் ஆளுநர் பதவிக்கு அடிபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments