யாழ்ப்பாண ஓவியங்கள்:நாமலின் அல்வா!


நாமல் ராஜபக்சவின் திட்டமிடலில் யாழ்.மாநகரில் உள்ள நவீன சந்தை கட்டிடத்தில் இளைஞர்களால் வரையப்படும் சுவர் ஓவியங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், சி.சிறீதரன் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்தியுள்ளனர். 

இன்று மாலை சுவரோவியங்கள் வரையப்படும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவரோவியம் வரையும் இளைஞர்களுடன் கலந்துரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சட்டைப்பையிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் நிதியை இளைஞர்களுக்கு அள்ளி வழங்கி ஊக்குவித்துமுள்ளார்.

உண்மையில் நாமலின் ஆசீர்வாதத்துடனும் கொழும்பு முன்னணி தீந்தை விற்பனை நிலையம்  இலவசமாக வழங்கிய தீந்தைக்கு காசு பார்த்து கல்லா கட்டிக்கொண்ட ஒரு கும்பல் கொழும்பிற்கு திரும்பி விட எதனையும் புரியாது இன்னொரு கும்பல் இழுபட்டு செல்வதே நடந்த உண்மையாகும்.

ஆனாலும் அப்பாவி இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சிலர் இதற்கு வலிந்து ஏதுமறியாமல் உதவிய பரிதாபத்தை கதையும் நடந்திருந்தது.

உண்மையில் நடந்ததென்ன?
தெற்கில் சிங்கள பௌத்த இனவாத வீரப்பிரதாபங்களை காண்பித்து கோத்தபாயவின் ஆசீர்வாதத்துடன் தெருவோர ஓவியங்கள் வரையப்பட்டன.இதனை தமிழ் மக்கள் அமைதியாக அதேவேளை உள்மன வெம்பலுடன் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.

இதனை தெற்கு ஆட்சியாளர்கள் புரிந்து கொண்ட நிலையில் நாமலது வலது கையான நபரொருவர் ஊடகவியலாளர்கள் சிலர் மூலமாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அணுகி சிங்களவர்கள் வடக்கிலுள்ள சுவர்களை பிடித்து படம் வரைய உள்ளனர்.தென்னிலங்கை வர்ண விற்பனை நிலையமொன்று இலவசமாக வர்ணங்களை தருகின்றது.நீங்கள் முந்திக்கொண்டு படங்களை வரைய முடியுமாவென தூண்டப்பட்டனர்.

ஆனாலும் மாணவர்கள் தரப்பில் போதிய ஆதரவு இல்லாதிருந்ததுடன் ஊடகவியலாளர்கள் தரப்பில் மறுபுறம் கடந்து வந்த போர்க்கால வலிகளை படங்களாக்கி வரையவேண்டுமென்ற நிபந்தனைகளால் அது முடிவின்றி இழுபறிப்பட்டது.

அப்போதே தீடீரென கொழும்பிலிருந்து வந்து இறங்கிய சிலர் தாங்களெ சொந்த காசில் வர்ணம் தீட்ட தொடங்கியிருப்பதாக படம் காட்ட அதன் உண்மை புரியாது பின்னாலே மந்தைகளாக ஒரு கூட்டம் தொடர யாழ்ப்பாண சுவர்களிலும் வர்ணம் பூச நாமலின் திட்டம் செயலுருப்பெற்றது.

அதிலும் கொழும்பு தீந்தை நிறுவனம் வழங்கிய தீந்தைகளிற்கும் கணக்கு போட்ட அக்கும்பல் நாமல் யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் குடைபிடித்து திரிந்த கும்பல் என்பதை ஊடகவியலாளர்கள் சிலர் அடையாளம் கண்டதால் போதிய ஊடக வெளிச்சம் இருந்திருக்கவில்லை.

ஆனாலும் என்ன நடக்கின்றதென தெரியாது எல்லா இடமும் இலவச விளம்பரத்திற்கு அலையும் சிறீதரன் செல்பி எடுத்து போட சுமந்திரனோ சொந்த காசில் அள்ளி கொடுத்திருக்கிறார்.

வீரர்களது பெயர் தாங்கிய யாழ்ப்பாணத்து வீதிகள் இப்போது நாமலின் சிந்தனையில் யப்னாவாக நிற்கின்றது.

எப்போது சிந்தித்து செயற்படும் தமிழ் சனமோ? 

No comments