ஐதேகவை மறுசீரமைக்க ஆலோசனை; யாருக்கு என்ன பதவி!


ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பை செய்ய கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்படி கட்சியில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியை தணிப்பதற்காக தலைவர் பதவியை தற்காலிகமாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

சபாநாயகர் பதவிக்கு வாசுதேவ நாணயக்கார எம்பியை நியமிக்க ஆளுங்கட்சி ஆலோசித்து வருவதாலேயே கருவை தற்காலிக தலைவராக நியமிக்க பரிசீலனை செய்யப்படுகிறது.

கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள எம்பிக்களுக்கு மீளவும் அந்த பதவிகளை வழங்காதிருக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நவீன் திஸாநாயக்கவுக்கு பிரதித் தலைவர் பதவியையும் ரவி கருணாநாயக்க அல்லது தயா கமகேவுக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments