எதிர்கட்சி தலைவர் கதிரை:அல்லாடும் ரணில்!


பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கப் பெறலாம் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்க் கட்சியில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுகின்றது. இந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ்காரியவசத்தினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் முன்மொழிவுக் கடிதம் குறித்து சபாநாயகர் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை, கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் படியோ அல்லது பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையிலேயோ அனுப்பவில்லையென அக்கட்சியின் சஜித் பிரேமதாச சார்பு மாற்றுக் குழு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த கடிதத்தின் சட்ட ரீதியான ஏற்புடைமை குறித்தும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது

No comments