நாங்கள் வெள்ளை வானை அனுப்பமாட்டோம்?


நாங்கள் ஊடகவியலாளர்களை கொல்லவோ அல்லது தாக்கவோ வெள்ளைவான்களை அனுப்பியதுமில்லை.இனி அனுப்ப போவதுமில்லையென தெரிவித்துள்ளார் அரச அமைச்சர் புத்திக பத்திரண.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையளார் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் நானும் ஒரு முன்னாள் ஊடகவியலாளன்.
ஊடகவியலாளர் தராகி சிவராம் உள்ளிட்ட பலரை பற்றி நான் அறிவேன்.அவர் எனது நண்பரும் கூட.

இன்று ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினமாகும்.முன்னைய காலங்களில் வடக்கு-கிழக்கு முதல் தென்னிலங்கை வரையென 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

எமது அரசு இத்தகைய கொலைகளை கடத்தல்களை தடுத்து நிறுத்தியுள்ளது.கடந்த கால ஊடக படுகொலைகளிற்கு விசாரணைகளை நிச்சயம் நடத்தவும் செய்வோம்.

எம்மை பற்றிகூட விமர்சிக்க கூடிய சூழலொன்றை கூட உருவாக்கிவிட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். 

பத்திரிகையாளர் சந்திப்பில் முற்போக்கு தமிழ் தேசியக்கட்சி தலைவர் விஜயகாந்த்தும் பங்கெடுத்திருந்தார்.

No comments