வழமைக்கு திரும்பியது வடக்கு புகையிரத சேவை!


யாழ்.தேவி ரயில் தடம் புரண்டதால் தடையேற்பட்டிருந்த இருந்த வடக்கு பாதையில் உள்ள ரயில் சேவைகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்படுள்ளது
தற்போது வழமையாக உள்ள கால அட்டவணைக்கு ஏற்ப வடக்கு பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மவுண்ட்லவ்னியாக்கு சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயிலின் ஐந்து பெட்டிகள் புதன்கிழமை மாலை (27) கல்கமுவா மற்றும் அம்பன்போலா நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டன.
தடம் புரண்டதால் கிட்டத்தட்ட 250 மீட்டர் ரயில் பாதை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரவு இரயில் வடக்கு ரயில் பாதையில் புதன்கிழமை இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கல்கமுவா மற்றும் அம்பன்போலா நிலையங்களுக்கு இடையிலான தூரத்தை பேருந்துகளைப் பயன்படுத்தி பல ரயில்கள் நேற்றைய தினம் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments