ரயில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் இன்று (13) காலை 9 மணியளவில் புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட முற்பட்ட ஒருவர் புகையிரதத்துடன் மோதிப் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் விபத்துக்குள்ளாகி படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியானார்.

இதன்போது நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே பலியானார்.

மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments