தமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு!


இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது செருப்பு வீச்சுக்குள்ளாகினர்.

வவுனியாவில் ஒன்று கூடிய தமிழரசு தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக, ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி, இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இரா.சம்பந்தனை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர் சந்திக்க விருப்பங்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.ஆனால் அதனை தமிழரசு தலைவர்கள் பொருட்படுத்தியிருக்கவில்லை.

இந்நிலையில் அங்கிருந்து வெளியே முற்பட்ட தமிழரசு தலைவர்கள் மீதே தாய்மார் செருப்புவீசி தாக்க முற்பட்டனர்.

இதனையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அவர்களை மடக்கிபிடித்து செருப்பு வீச்சிலிருந்து காப்பாற்றியிருந்தனர்.

No comments