யாழ் பல்கலை மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று (03) மாலை 5.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாகவுள்ள ஆண்கள் விடுதியில் இருந்தே மன்னாரை சேர்ந்த கியூமன் (27-வயது) என்ற மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறித்த மாணவனுக்கு பரீட்சை ஒன்றை எழுத அனுமதிக்காத காரணத்தினாலேயே தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments