குழு மோதலில் பெண் ஒருவர் கொலை


வெலிமடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையத்து குறித்த சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments