Header Shelvazug

http://shelvazug.com/

அணிதிரளும் அவசியம் தேர்தலின் முடிவு

தேர்தல் முடிவு மக்கள் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், எமது நாட்டின் வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய தேசிய இனங்கள் எதிர்கொள்கின்ற தேசிய இனப் பிரச்சினையானது, இந்நாட்டின் பிரதான முரண்பாடாக நீடித்து வருவதையே அண்மைய தேர்தல் முடிவுகள் யதார்த்த பூர்வமாக மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments