இன, மத அழிப்பை செய்ய மாட்டேன்; மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்


அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை 11 மணிக்கு மன்னாரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வேன். புத்தளம் வீதியை மன்னாருடன் வில்பத்து காட்டுக்கு பாதிப்பின்றி இணைப்பேன். தலைமன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான நான்குவழிப் பாதையை அபிவிருத்தி செய்வேன்.

பாலர் பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவேன். அதில் கடமைபுரியும் உதவி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கும் அரச சம்பளத்தை வழங்குவேன். வெவ்வேறாக கட்டிடங்கள். பிள்ளைகள் விளையாடும் சிறுவர் பூங்கா மற்றும் பகல் போசனத்தை இலவசமாக வழங்குவேன்.

ஒருமித்த இலங்கை நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன, மத பேதமின்றி வழங்குவேன் என்பதை மன்னார் மண்ணில் வைத்து உறுதியாக கூறுகிறேன். இனவாதத்தை பரப்புவோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க நான் பின்நிற்க மாட்டேன்.

நான் ஒரு சிறந்த பௌத்தன். பௌத்த கொள்கையை, கோட்பாட்டை சரியாக பின்பற்றும் பௌத்தன் நான். எனவே இனத்தை, மதத்தை வைத்து மதங்களை, இனங்களை ஒருபோதும் அழிக்க முடியாது. புத்த பெருமான் ஒருபோதும் இனங்களை, மதங்களை வைத்து இன, மத அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது என தெளிவாக கூறியுள்ளார். - என்றார்.

No comments