சிறிசேனவின் அராஜகத்துக்கு சஜித் எதிர்ப்பு

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதை கண்டிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மரண தண்டனை கைதி ஜூட் ஜயமஹாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு தொடர்பாக தற்போது பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (12) டுவிட்டரில் மேற்கண்டவாறு சஜித் தெரிவித்தார். மேலும்,

நாங்கள் வன்முறைக்கு குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பார்வையாளர்களாக இருக்க முடியாது. கொலையாளிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் முடிவை நான் கண்டிக்கிறேன்.

எனது தந்தையும் கொலை செய்யப்பட்ட ஒருவர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் வருத்தத்தை நான் புரிந்துகொள்கிறேன்.

எனவே நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இவ்வாறான அதிகாரங்களை ஒருபோதும் துஸ்பிரயோகம் செய்ய மாட்டேன் - என்றார்.

No comments