கோத்தா பேரணியில் நடந்த கொடூரம்!

கேகாலையில் நேற்று முன் தினம் (07) இடம்பெற்ற கோத்தாபய ராஜபக்சவின் பேரணியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்ந்qத சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத ஹேமத்கம பொலிஸ் நிலையப் பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்னர்.

பலவத்கமயில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட குறித்த மன நலம் பாதிக்கப்பட்ட 26 வயதுடைய யுவதி வீட்டுக் திரும்பிச் செல்லும் வழியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும் பேரணி நடைபெற்ற இடத்திலேயே பேருந்துகள் வைத்து குறித்த யுவதி வன்புணரப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாடு அழுத்தம் காரணமாக வாபெஸ் பெறப்பட்டது.

இந்நிலையிலேயே சம்பவத்தை மறைக்க முயன்று நடவடிக்கை எடுக்கத் தவறிய ஹேமத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி உட்பட பொலிஸார் மூவர் நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments