மக்களை துப்பாக்கியால் சுடுபவர்கள் அதிகாரம் தேவையா?

தேர்தலுக்கு முன்னரே மக்கள் மீது துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொள்கின்றவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை- தெனியாய பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, 
தேர்தலுக்கு முன்னதாகவே எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்கள், நிராயுதபாணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே இவ்வாறு செயற்படுகின்றார்கள். அதிகாரத்தை கைப்பற்றிவிட்டார்களாயின் அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதை மக்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.
எனவே   நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்,  அனைவரது  எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல் என்பதை மக்கள் மறக்க கூடாது.

No comments