இருவரை அடித்துக் கொன்ற யானை

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை – மங்களகம,  கொஹொம்பகஸ் தலாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 59 வயதுடையவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு  10 மணியளவில் திடீரென  குறித்த நபர் வீட்டில் இருந்த நிலையிலேயே யானையொன்று வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமடு, மக்குலானை பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் கட்டடங்கள் மற்றும் மரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments