அயோத்தி தீர்ப்பு, அமைச்சர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு!

விடுமுறை நாட்களை எல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் இன்னும் ஏழு நாட்களுக்குள் நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்து வரும் சில முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமான வழக்காக அயோத்தி வழக்கு இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைப்பெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதை குறிப்பிட்டு, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. அதனால் இதில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களை இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்துள்ளார்.
Post a Comment