கோத்தா உத்தரவில் பிள்ளையானே பயிற்சி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்துள்ளார். மஹிந்த பிள்ளையானை தேடிச் சென்றது அவரது சுக நலன்களை விசாரிப்பதற்கு அல்ல. மாறாக சாக்கு விளையாட்டு ஒன்றை ஆடுவதற்காக. தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என இவர்கள் இப்போதே வாக்குறுதி அளித்து விட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிள்ளையான் விளக்கமறியலில் தண்டனை அனுபவித்து வருகிறார். மட்டக்களப்பு சென். மேரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹெந்தவிதாரன தலைமையில் இயங்கிய ஆயுதமேந்திய ஒட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலைக்கு பிள்ளையானின் ஆட்களே பயன்படுத்தப்பட்டனர். நிலைமை இவ்வாறு இருக்க மகிந்த ராஜபக்ச பிள்ளையானுக்கு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை கையளித்துள்ளார் என முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கீர்த்தி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்..


சகரன் இராணுவ புலனாய்வுப் பிரிவில் 2007 ஆம் ஆண்டு இணைந்துள்ளார். புலனாய்வு பிரிவு 'லிஸ்டில்' பிரான் உள்ளிட்ட குழுவை சேர்த்தது அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவு கேனல் பதவியிலிருந்த குவான் முத்தாலிப் என்பவர் ஆவார். முத்தாலிப் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 120 இளைஞர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவில் இணைத்திருந்தார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐஎஸ்ஐஎஸ் குழுவினரின் கொள்கைக்கு அமைய குறித்த இளைஞர்கள் பயிற்றப்பட்டனர். சகரான் உள்ளிட்ட குழுவினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது பிள்ளையான் குழுவில் உள்ள 'சின்னத்தம்பி' என்ற முன்னாள் போராளி ஆவார். தற்கொலை செய்துகொண்ட சஹ்ரானின் தம்பி சிறைச்சாலையில் வைத்து சின்னத் தம்பியை அறிமுகமாக்கிக் கொண்டார். யுத்தம் முடிவடைந்த பின்னர் சஹரான் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஆனார். தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு கொழும்பில் இடம் கொடுத்தது கோட்டாபய ராஜபக்ச ஆவார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான சகரான் உள்ளிட்ட குழுவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்கியது கோட்டாபய ராஜபக்ச என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோட்டாவின் நெருப்பு வைக்கும் குழு..
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து சஹரான் தற்கொலை குண்டுதாரியாக மாறினார். கண்டி திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை டேன் பிரசாத், நாமல் குமார, அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினரே முன்னெடுத்தனர். இனவாதத்தை தூண்டுவதற்காக கட்டுகஸ்தோட்டை அம்பதென்ன விகாரைக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் இவர்களே. இந்த தகவலை நாம் வழங்க வில்லை மாறாக டான் பிரசாத் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகிய அவர்களுடைய சகாவான அசேல தர்மசிறி என்பவர் ஊடக சந்திப்பு நடத்தி அம்பலப்படுத்தியுள்ளார். பிரசாத், நாமல் குமார, அமித் போன்றவர்கள் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் மடியில் இருப்பது உறுதியாகி விட்டது. கோட்டா - சிரிசேன கொலை சதியும் ஒரு சோடிக்கப்பட்ட கதை என்பதே உண்மை. பொதுபல சேனாவும் கோத்தபாயவால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அனைத்து இனவாத குழுக்களையும் இயக்கியது கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குழுவாகும்.

கோட்டாவின் சூழ்ச்சி குறித்து கூறும் மாகல..
மினுவாங்கொடையில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டது கோட்டாபய ராஜபக்சவின் குழுவினரே. மினுவாங்கொடை தீயின் பின்னர் மதுமாதவ களத்தில் இறங்கினார். ஹெட்டிபொல மற்றும் மினுவாங்கொடை தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இன்னும் விளக்கமறியலில் உள்ளார். தாக்குதலுக்காக நாமல் குமார பயன்படுத்திய டிபென்டர் வாகனம் 'ரோயல் பீச் சமன்' என்று அழைக்கப்படும் சமன் பெரேரா என்பவருடையது என தெரியவந்துள்ளது. ஹெரோயின் வியாபாரியான இவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் 'அப்பே ஜனபல' கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த கட்சியின் தேசிய அமைப்பாளராக செயல்பட்டவர் இன்று கோட்டாவுக்கு ஆதரவாக கிளம்பியுள்ள அசேல தர்மசிறி ஆவார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து தாக்குதல்களின் பின்னணியிலும் கோட்டாபய ராஜபக்ச இருந்துள்ளார் என்பது தற்போது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையான் குழு கிழக்கில் தாக்குதல் நடத்த ஆயத்தம்..
ஹிஸ்புல்லா என்பவர் மஹிந்தவின் அணியில் இருப்பவர். ஹிஸ்புல்லாவின் அடியாளான மிப்லாள் மவ்லவி தேர்தல் சட்டத்தை முழுமையாக மீறி '70 வருட ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென முஸ்லிம் மக்களை வலியுறுத்தி வருகிறார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆயுதக் குழுவை வைத்து தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. இதில் ஒரு விடயமாக பிள்ளையான் குழுவினரால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளிடம் செய்துள்ள முறைபாடாகும். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பொறுப்பாளர் 'மேரி போல்அண்ட்' இடம் ரவூப் ஹக்கீம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.No comments