தடையை மீறி நல்லூரில் பிரமாண்ட நினைவேந்தல்

நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி முன்னால் 25 ஆயிரம் மாவீரர்களின் பெயர்களை தாங்கிய கல்வெட்டு வடிவிலான நினைவாலயத்தில் இன்று (26) சற்றுமுன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்தப் பெயர்களை வைத்து இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சம்பவ இடத்திற்கு சென்ற யாழ் பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது என்று தடுத்துள்ளனர்.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள். அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும் அனுமதி மறுத்து ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் அதனையும் மீறி இந்த நினைவேந்தல் நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது.



No comments