காணி முறைகேடு:துரத்தும் ஆணைக்குழு?



வவுனியா பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளால் முறைக்கேடான முறையில் அரச காணிகள் பெறப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணகை;குழுவொன்றினை அமைத்து விசாரணை நடத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளது.

இம் மாதம் 5 ஆம் திகதியிடப்பட்டு மனித உரிமை ஆணைக்கழுவினால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஊழலற்ற மக்கள் அமைப்பானது வவுனியா பிரதேச செயலகம் ஊடாக பல அரச அதிகாரிகள் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக நொச்சுமோட்டை பகுதியில் காணிகளை பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டாளர் தங்களது நிர்வாகத்திற்கு முறையிட்டுள்ள போதிலும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி அதிகாரிகள் பலர் எவ்வாறு 2013/01 ஆணையாளரது சுற்றுநிருபத்தின் கீழ் நொச்சுமோட்டை பகுதியில் காணிகளை பெற்றுக்கொண்டனர் என்பது தொடர்பிலும் இவர்களது தகைமை தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை மேற்கொண்டு பொதுமக்களிற்கான வெளிப்படையான பொது நிர்வாக சேவையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இதனடிப்படையில் தங்களது தலைமையின் கீழ் விசாரணை குழு ஒன்றினை அமைத்து வவுனியா பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளால் அரச காணிகளானது முறைக்கேடான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டதா? என்பதனை விசாரணை செய்யுமாறும் கேட்டுக்கொள்வதுடன் விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் எடுக்கப்படும் விசாரணை அறிக்கையினை கிரமமாக தமக்கு அனுப்பி வைக்குமாறும் ஆணைக்குழுவால் எடுக்கப்படும் நீதி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.


No comments