சுவிஸ் காவல்துறையின் பிடியில் குர்திஷ் போராட்ட ஆதரவாளர்கள்!

துருக்கியின் குடியரசு தினத்தை முன்னிட்டு  சுவிட்சர்லாந்தில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மக்கள் கட்சியால் சோலோதுருன் பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் குர்திஷ் மக்கள்மீது  துருக்கியினால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை வெளிப்படுத்தும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை YPJ ஆதரவாளர்கள் நடத்தினர்.


துருக்கியில் இருந்தும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்களின் அழுத்தத்தால் போராட்டம் நடத்தியவர்களை சுவிஸ் காவல்துறையினர் கைது செய்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிகின்றன.

No comments